மனிதனின் இரக்கமற்ற செயல்களுக்கு எல்லையே இல்லை என்பதை உணர்த்தும் ஒரு அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு குரங்கு பாம்பின் பிடியில் சிக்கி, உயிர் பிழைப்பதற்காகப் போராடி, அலறுகிறது. ஒரு மலைப்பாம்பு அந்தக் குரங்கைப் பலமாகச் சுற்றி, அதைச் சாப்பிட முயற்சிக்கிறது. இந்தக் கொடூரமான காட்சியைப் பார்த்துக் கொண்டும், அதைப் பதிவு செய்து கொண்டிருந்த நபர், அந்தக் குரங்கின் உயிரைக் காப்பாற்ற எந்த உதவியும் செய்யவில்லை.

​குரங்கின் உயிருக்கு உதவுவதை விட, அந்த வீடியோவை ரீலாகப் பதிவு செய்வதிலேயே அவர் ஆர்வம் காட்டியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த மக்கள், அந்த வீடியோவை எடுத்தவர் மீது கடும் கோபத்தைக் கொட்டி வருகின்றனர். “உயிர் பிழைக்கப் போராடும் இந்த உயிரினத்திற்கு உதவ நேரம் இல்லை, ஆனால் வீடியோ எடுக்க மட்டும் நேரம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

“மனிதாபிமானம் என்பது வீடியோ எடுப்பதில் அல்ல, உதவி செய்வதில்தான் நிரூபிக்கப்படுகிறது” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக வீடியோ எடுப்பதில் கவனம் செலுத்திய அந்த நபரின் செயலுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பலர் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.