சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது பாதையைக் கடந்து சென்ற சைக்கிளை அகற்றுவதற்கு வண்டியில் இருந்து இறங்காமல், தனது இருக்கையில் இருந்தபடியே அதைத் தூக்கி எறிய முயன்றார். “தன் வினை தன்னை சுடும் ” என்ற பழமொழிக்குச் சரியான உதாரணமாக அமைந்த இந்தச் செயலின் விபரீதம் அடுத்த நொடியே வெளிப்பட்டது.

<a href=”http://

“>
அவர் எறிய முயன்ற சைக்கிள், ஆட்டோவின் பின் சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. வேறு வழியின்றி ஆட்டோவிலிருந்து கீழே இறங்கிய ஓட்டுநர், சைக்கிளை அகற்ற முற்பட்டபோது, ஆட்டோ தானாகவே செங்குத்தான சரிவில் உருண்டு, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. ஒரு நிமிடம் இறங்கிக் கஷ்டப்படச் சோம்பேறிப்பட்டதால், சைக்கிளைச் சேதப்படுத்த முயன்ற ஓட்டுநர், தனது சொந்த ஆட்டோவையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.