விலங்கியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுடன் விலங்குகள் காட்டும் அன்பும், அவற்றின் புத்திசாலித்தனமும் எப்போதும் வியப்பிற்குரியவை.
அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்டாகி வரும் வீடியோ ஒன்றில், கண்ணாடித் தடுப்பிற்கு பின்னால் இருக்கும் ஒராங்குட்டான் ஒன்று, அங்கு வந்த இளம்பெண் ஒருவரின் தோள்பையைப் பார்த்து சைகை செய்கிறது.
பையின் ஒவ்வொரு ஜிப்பையும் (Zip) திறந்து காட்டுமாறு அந்த ஒராங்குட்டான் சைகை செய்ய, அந்தப் பெண் முதலில் தனது மேக்கப் சாதனங்களை எடுத்துத் காட்டுகிறார். அதில் ஆர்வமில்லாத ஒராங்குட்டான், மீண்டும் பையைச் சுட்டிக்காட்ட, அவர் ஒரு சாக்லேட் பாரை வெளியே எடுத்தார். அதைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த அந்த ஒராங்குட்டான், அந்தச் சாக்லேட்டை தனக்குத் தரும்படி அங்கிருந்த கம்பி வேலியின் வழியாக வழி காட்டியது காண்போரை வியக்க வைத்தது.
Orangutan wanted to look inside the bag pic.twitter.com/CRWiv0ZnJj
— Damn Nature You Scary (@AmazingSights) February 3, 2026
“>
மனிதர்களைப் போலவே மிகத் தெளிவாகச் சைகை செய்து உரையாடும் இந்த ஒராங்குட்டானின் அறிவுத்திறன் குறித்த வீடியோ, “விலங்குகளின் உலகம் அற்புதம்” என்ற நெகிழ்ச்சியான கருத்துகளுடன் இணையத்தில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து வருகிறது.
