சேலம், சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் இன்று முக்கிய நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த மேடையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், தனது அரசியல் வருகைக்கான காரணத்தையும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் மிகத் தெளிவாகப் பேசினார். “நான் அரசியலுக்கு நீதி கேட்டுத்தான் வந்திருக்கிறேன். மற்ற கட்சிகளைக் கொள்ளையடிக்கவோ, அவர்களை அழிக்கவோ அல்லது ஒழிக்கவோ நான் இங்கு வரவில்லை” என்று மிக ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

​மேலும், தனக்கு வெறுப்பு அரசியலில் துளியும் உடன்பாடில்லை என்பதை உரக்கச் சொன்ன அவர், கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் தமிழக அரசியலில் ஒரு முதன்மை சக்தியாகத் தனது கட்சி வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். “நமக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருக்கிறது, அந்த நம்பிக்கையில்தான் நான் முன்னேறி வருகிறேன்” என்று உற்சாகமாகப் பேசினார். விஜய்யின் இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.