“நீ ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வாய்?” என்று கேட்கப்படும் கேள்விகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார். மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்ப்பதுதான் தனது முதல் வேலை என்று குறிப்பிட்ட அவர், “கொஞ்சம் காத்திருங்கள், மிகவும் தெளிவான ஒரு தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. அது வரும்போது உங்கள் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்” என்று நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.
மேலும், தன்னை நம்பும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் என்று உறுதியளித்த விஜய், மற்ற கட்சிகளைப் போல ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நடைமுறைக்குச் சாத்தியமே இல்லாத பொய் வாக்குறுதிகளைத் தான் ஒருபோதும் அளிக்கப் போவதில்லை என்றார். “ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய அரசோ அல்லது மற்றவர்களோ இது தரவில்லை, அது தரவில்லை என்று பம்மிக் கொண்டு இருக்க மாட்டேன்.
மக்களுக்காக எந்த எல்லைக்கும் (Extreme) சென்று போராட நான் தயாராக இருக்கிறேன்” என்று ஆவேசமாக முழங்கினார். விஜய்யின் இந்தத் துணிச்சலான பேச்சு தற்போது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
