மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு திடீரென்று நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சராக இருப்பவர் தான் கிஷன் ரெட்டி. இவருக்கு வயது 63. இவருக்கு நேற்று இரவு பத்து முப்பது மணி அளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது