பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தகவல் அனுப்பவும் தகவல்கள் பெறவும் பயன்படுத்திய 14 மொபைல் செயலிகளை மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்து முடக்கியுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட செயல்களின் பட்டியல்: மீடியா ஃபயர், பிரேயர், பி சாட் , கிருப்வைசர், எனிக்மா, செஃப் சுவிஸ், விக்கர்மி , நாந்த்பாக்ஸ் , கோணியன், ஐஎம்ஓ, எலிமெண்ட் , செகண்ட் லைன், ஜாங்கி, த்ரீமா ஆகும். ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கும்பல் இந்த செயலிகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.