மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கஜானன் ஷங்கர் டோட்ரே என்ற இளைஞர் மது போதையில் டெம்போ லாரியை ஒட்டிவந்துள்ளார். போதையில் இருந்த அவர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் போதையில் வாகனம் ஓட்டிய கஜானன் ஷங்கரை கைது செய்துள்ளனர்.