திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு முழலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் இன்று தனது வீட்டிற்கு அருகில் மது குடித்துக் கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் திடீரென மயங்கி விழுந்த கோவிந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோவிந்தன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.