தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளதுடன், மாற்றுக் கட்சிகளில் இணையும் நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மதிமுக (MDMK) கட்சியின் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த சிவநாதன், திடீரென அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

சிவநாதன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்புதான், மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மல்லை சத்யா மதிமுகவில் இருந்து விலகிய நிலையில், தற்போது மாநில மாணவர் அணியின் துணைச் செயலாளரான சிவநாதனும் விலகி அதிமுகவில் இணைந்திருப்பது, மதிமுகவுக்கு மேலும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.