இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால், விசித்திரமான அல்லது தவறான செயல்களை மக்கள் உடனே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு வியாபாரி தானிய மூட்டையை எடைக் கல்லில் வைக்கும்போது, மிகத் தந்திரமாகத் தனது காலையும் அந்த எந்திரத்தின் மீது வைத்து அதிக எடை காட்டுவது பதிவாகியுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அதிக விலைக்குப் பொருளை விற்பனை செய்யும் அந்த வியாபாரியின் மோசடி செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த 13 வினாடி வீடியோ @Ansari5k என்ற எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. “உலகில் நேர்மையற்றவர்களுக்குப் பஞ்சமே இல்லை, இத்தகைய மோசடி செயல்கள் ஏழை எளியவர்களைப் பாதிக்கும்” என்ற கருத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
बेईमानों की कमी नहीं है दुनिया में , इस तरह की चालाकी आपको बर्बाद कर देगी। pic.twitter.com/4auXjL90EI
— Anis Ahmad (@Ansari5k) June 29, 2026
“>
கிராமப்புறங்களில் இது போன்ற திருட்டுகள் சாதாரணமாக நடப்பதாகவும், வியாபாரிகளின் இத்தகைய குறுக்கு வழிகள் குறித்தும் இணையவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். எங்கே, எப்போது இந்தச் சம்பவம் நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
