ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் (அ) எந்த வங்கிக் கிளையிலும் மற்ற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியானது தெரிவித்து உள்ளது. இந்நிலையில் அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் (அ) மாற்றும் வசதியை வழங்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

செப்,.30, 2023 (அ) அதற்கு முன்பு இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய (அ) மாற்ற மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. எனினும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2000 நோட்டு செல்லுமா, செல்லாதா என்பதை ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை. செப்டம்பர் 30ம் தேதிக்குள் பொதுமக்கள் இந்த ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு உள்ளதால் அந்த தேதிக்கு பின் அந்த நோட்டு செல்லுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.