சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 15,164 ரூபாய்க்கும், ஒரு சவரன்‌ 1,21,312 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.