ஜூலை முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூன் மாதத்தில் எந்தெந்த மாற்றங்கள் வர இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூன் மாதம் முடிவடைந்து ஜூலை மாதம் தொடங்க உள்ள நிலையில், மக்களுடன் தொடர்புடைய நேரடி விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்பட உள்ளன. சிலிண்டர் விலை குறையலாம் என கூறப்படுகிறது. வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகள் மூலம் 7லட்சத்திற்கு மேல் செலவு செய்தால் 20% TCS கட்டணம் செலுத்த வேண்டும். CNG விலையில் மாற்றம் இருக்கலாம். வரி செலுத்துபவர்கள் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.