இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது ஹைதராபாத்தை சேர்ந்த 59 வயது மூதாட்டி இடம் AI மூலம் மருமகன் குரலை போல மாற்றி பேசி 1.4 லட்சம் மோசடி நடந்துள்ளது.

கனடாவில் இருந்து அவரது மருமகன் போன்று நடு இரவில் மூதாட்டிக்கு போனில் அழைத்து தான் விபத்தில் சிக்கியதாகவும் அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் பணம் கொடுக்காவிட்டால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் மறுமண நபர் பேசியுள்ளார். இதனை நம்பி மூன்று முறை பணம் அனுப்பி மூதாட்டி ஏமாந்துள்ளார். இதனை தொடர்ந்து உண்மை தெரிய வர அவர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.