கர்நாடகவில் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, முதலமைச்சர் சித்தராமையாவும், அவரது மகன் யதீந்திராவும் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பணம் வசூலிப்பதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், “அந்த வீடியோவில் பணம் குறித்தோ, பணியிட மாற்றம் குறித்தோ பேசவில்லை.

பணம் பெற்றுக்கொண்டு பணியிட மாற்றம் செய்ததாக நிரூபித்தால், முதலமைச்சர் பதவி மட்டுமல்ல அரசியலை விட்டும் விலகுகிறேன்” என்று சவால் விடுத்துள்ளார். இதனால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.