சமீப காலமாக வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதன்பின்னர் வங்கியின் சார்பாக தவறாக அனுப்ப பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டு வருவதை நாம் செய்தியாக கேட்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் யூகோ வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் ரூ.820 கோடி வரவு வைத்துள்ளது. தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக இதற்கு விளக்கம் கொடுத்த வங்கி, இதில் 649 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும். மீதம் உள்ள 171 கோடியை மீட்கும் பணி நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.