இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் அட்டை இல்லாமல் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாக்காளர் அட்டை தொலைந்து விட்டால் அல்லது பதிவு செய்து வரவில்லை என்றால் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம்,  பான் கார்டு, ஆதார் அட்டை, வேலை அட்டை, தபால் அலுவலக மற்றும் வங்கி பாஸ்புக், தொழிலாளர் சுகாதார காப்பீட்டு அட்டை, ஓய்வூதிய அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மூலமாக வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதலில் என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். பின்னர் EPIC எண் மற்றும் சரியான மாநிலத்தை தேர்வு செய்து வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு ஆன்லைன் மூலமாக உங்களால் வாக்களிக்க முடியும்.