செய்தியாளர்களிடம் பேசிய தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம்,  அதே மாதிரி கோவில் எல்லாம் பார்த்துட்டு…  இன்னைக்கு திருமண விழாவிலே கலந்துக்கிட்டு இருக்கேன்…  இது முடிச்சு எங்களுடைய மாவட்ட செயலாளர் சுரேஷ் அவர்களின் இல்லத்திற்கு செல்வோம். அவுங்க அப்பா,  அம்மா இருவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்த இருக்கிறேன்.

இதுக்காக தான் இன்னைக்கு வந்து இருக்கேன். நீங்க ஏதாவது கேள்வி கேட்கணும்னு கேளுங்க. மாற்று வழி என்றால் ஒரே ஒரு விஷயம் தாங்க… சென்னை மெட்ரோபொலிட்டன் சிட்டி. ஒரு பக்கம் ரோடு போட்டுக்கிட்டே வருவாங்க . உடனே அடுத்த பக்கம் பள்ளம் தோண்டுறாங்க.  அதை மூடுவதற்கோ, உடனடி நடவடிக்கை எடுக்குறதுக்குறதுக்கோ ரொம்ப ரொம்ப காலதாமதமாக ஒரு விஷயம் நடந்துட்டு இருக்கு. மழைநீர் வடிகால் அப்படின்னு சொல்லி ஆரம்பிச்சு….  இப்போ

ரெண்டரை வருஷம் கிட்ட ஆயிடுச்சு. பள்ளம் தோண்டுவதில் காமிக்கிற வேகத்தை….  அதை க்ளோஸ் பண்ணி வேலையை முடிக்கிறதுலையும் இந்த அரசாங்கம் முனைப்பு காட்ட மாட்டேங்குறாங்க. அதனால் பெரிய இன்னல்களை இன்னைக்கு டூவீலர்,  ஆட்டோ இந்த மாதிரி வாகனங்களில் பயணிப்பவர்கள் மிக மிக கஷ்டப்படுறாங்க.

எனவே நிச்சயமாக தமிழக அரசு,  இப்ப இருக்கிற அரசு….  சிங்காரச் சென்னை….  சிங்கப்பூருக்கு இணையான சென்னை அப்படின்னு சொன்ன ஒரு அரசு தான் இன்னைக்கு இருக்கு. ஆனால் அதற்கான வழிகளோ,  முயற்சிகளோ எதுவும் எடுப்பதாக தெரியல.  அதைத்தான் நான் சொல்றேன் உடனடியாக மெட்ரோ ட்ரெயின் திட்டம்….  மழை நீர் வடிகால் எல்லாம் சரி செய்து,  மக்கள் பயணிப்பதற்கு முதலில் ஒரு பாதுகாப்பான சாலையை அமைத்து தரணும் என தெரிவித்தார்.