ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தன்னுடைய ஆட்சியை தக்க வைப்பதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதனைப் போலவே எதிர்க்கட்சியான பாஜகவும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம் வழங்கப்படும் என்றும் 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதனைப் போலவே காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பலமுறை கேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும், பெண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெயரில் இரண்டு லட்சம் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது.