உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இன்று அதிக அளவிலான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் தற்போது பிரதம மந்திரி கடன் யோஜனா திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கப்படுவதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது ஆதார் அட்டை வைத்திருந்தால் பிரதம மந்திரி கடன் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்தது மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த தகவல் குறித்து ஆய்வு செய்தபோது இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு கடனும் வழங்கப்படவில்லை என நிரூபணம் ஆகி உள்ளது.

எனவே பொதுமக்கள் இது போன்ற போலியான செய்திகளை நம்பி யாரும் ஏமாந்து பணத்தை இழக்க வேண்டாம் என்றும் உங்களின் ஆதார் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களின் விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் பத்திரிகை தகவல் பணியகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் ஏதாவது தகவல் பரவினால் அதனை உண்மையானதா இல்லை போலியானதா என்பதை ஆராயாமல் அந்தக் கருத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.