மே 1 ஆம் தேதி முதல் நிகழ இருக்கும் முக்கியமான மாற்றங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம். மே மாத துவக்கத்திலிருந்து தொழில் அதிபர்களுக்கு GST-யில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டுகளில் கேஒய்சி உடன் கூடிய இ-வாலட்டுகள் வாயிலாக மட்டுமே முதலீடு செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை சந்தை கட்டுப்பாட்டாளர் செபி கேட்டுக் கொண்டுள்ளது.

இது வருகிற மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கு பின் முதலீட்டாளர்கள் கேஒய்சி உடனான இ-வாலட்கள் வாயிலாக மட்டுமே முதலீடு செய்ய இயலும். ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் அரசாங்கம் எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி போன்றவற்றின் புது விலைகளை வெளியிடுகிறது.

சென்ற மாதம் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை அரசானது ரூபாய்.91.50 குறைத்தது. அதன்பிறகு டெல்லியில் வர்த்தக சிலிண்டர் ரூ.2,028-ஆக குறைக்கப்பட்டது. இருந்தாலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. வருகிற மே 1 ஆம் தேதி முதல் சிஎன்ஜி-பிஎன்ஜி விலையிலும் மாற்றம் இருக்கலாம்.