JEE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இன்று காலை JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE Advancedகான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி இதற்கான தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

ஜேஇஇ முதன்மைத் தேர்வு வெற்றிகரமாக முடிவடைந்து, ஜேஇஇ மெயின் ரிசல்ட் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தத் தேர்வு சரியாக நடத்தப்படுகிறது. தேர்வில் முதல் 2,50,000 மதிப்பெண் பெற்றவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.