இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ரயில் பயணம் மிக வசதியாக உள்ளது. ரயில்களில் முன்பதிவு செய்பவர்களுக்கும் பல வசதிகள் உள்ளன. இந்நிலையில் உங்களின் இருக்கைக்கு ஏற்ப ரயில்வே பல விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி முதலில் நீங்கள் சைடு அப்பரில் பயணம் செய்தால் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். ஆனால் உங்களுடைய விளக்கை பத்து மணிக்கு மேல் எறிய விடக்கூடாது. மேலும் பகல் நேரத்தில் சைடு லோயர் சீட்டில் அமர்ந்து கொள்ளலாம்.

ஆனால் இரவு 10 மணிக்கு மேல் அமரக்கூடாது. அதனைப் போலவே நீங்கள் சைடு லோயர் சீட்டில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். ஆனால் சைடு அப்பரில் உள்ளவர்கள் கீழே அமர விரும்பினால் அவருக்கு பகல் நேரத்தில் மட்டும் நீங்கள் இடம் கொடுக்க வேண்டும். லோயர் சீட்டில் இருந்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியாது. இரவு 10 மணிக்கு பிறகு தான் தூங்க வேண்டும். மிடில் சீட்டில் இருப்பவர்களுக்கும் அதே விதிமுறைதான். அதனைப் போலவே அப்பரில் இருந்தால் அவர் யாருடனும் இருக்கையை பகிர வேண்டாம் எப்போது வேண்டுமானாலும் தூங்கிக் கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.