இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 2025 ஆம் நிதி ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒளியிழை வடங்களை நிறுவ உள்ளது.இந்த நடவடிக்கையானது தொலைதூர இடங்களுக்கு இணைய சேவை இணைப்பை வழங்க செய்வதையும் 5G மற்றும் 6ஜி போன்ற புதுயுக தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் செயல் ஆக்கத்தினை துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் தளவாடங்கள் மேலாண்மை லிமிடெட் என்ற நிறுவனம் ஆனது எண்ணிம சேவை சார்ந்த நெடுஞ்சாலைகளின் வலை அமைப்பை செயல்படுத்த உள்ளது. டெல்லி மற்றும் மும்பை விரைவு வழித்தட சாலையில் சுமார் 1377 கிலோ மீட்டர் தூரத்திலையும், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் வழிதடத்தில் 512 கிலோ மீட்டர் தூரத்தையும் சோதனை முறையில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.