பிரதமர் மோடியின் மன் கி பாத் 100- வது எபிசோடு நியூயார்க்கில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இது பற்றி ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு ட்விட்டரில், ஏப்ரல் 30ஆம் தேதி ஐநா அறங்காவலர் கவுன்சிலில் நேரலை செய்யப்பட உள்ளதால் ஒரு வரலாற்றுத் தருணத்திற்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் சீன உள்ளிட்ட 63 மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத் நிகழ்வு மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்த அத்தியாயம் நூறாவது எட்டியதை விமர்சையாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. அதே சமயம் இன்று 100 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட உள்ளது.