தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் லஞ்சம் வாங்குவது முழுமையாக ஒழிந்த பாடு இல்லை. இந்த நிலையில் மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . ஆதாரத்தோடு புகார் வந்தால் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்த மாதம் 12ஆம் தேதி வரை 59 ஆயிரத்து 565 பேர் மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கால அவகாசத்தை தாண்டியும் 10 நாட்களுக்கு மேல் கரண்டு பில் கட்டவில்லை . அதன் மொத்த மதிப்பு மட்டும் 47.26 கோடி ஆகும். எனவே உடனே அனைவரும் கரண்ட் பில் கட்ட வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது