இந்தியாவில் சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச்சத்து குறைப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக விற்பனை செய்யப்படும் சுமார் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்தந்த மருந்துகள் தரமற்றவை என்பதை https: //cdsco.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது . மேலும் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது