இந்தியாவில் பல மாநிலங்களிலும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் சாலை விதிகள் சரியாக கடைபிடிக்கப்படாததுதான். இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் சாலை விதிகளை கடுமையாக்கி வருகின்றன. அதன்படி தற்போது கேரள மாநில அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி இனி எளிமையாக ஓட்டுனர் உரிமம் பெற முடியாது.

அதாவது சாலை விபத்துக்களை குறைப்பதற்காக ஓட்டுநர் உரிமம் பெற விதிமுறைகளை கேரளா அரசு தற்போது கடுமையாக்கியுள்ளது. ஒரு நாளைக்கு 30 பேரை மட்டுமே சோதனைக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோமேட்டிக் கார், மின்சார கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான கார்கள் சோதனைக்கு அனுமதி இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.