இந்தியா முழுவதும் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளின் பயன்பாடு அதிகமாகியுள்ளது. அதில் சிறிய முதல் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாக நடைபெறுகின்றன. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் பண பரிவர்த்தனை செயலிகளுக்கு கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் இனி வங்கிகளிலும் KYC சரிபார்ப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பு எளிதாகும்.

அதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை ஜெராக்ஸ் காப்பியுடன் கேஒய்சி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் அனைத்து நிறுவனங்கள், அரசு திட்டங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வருகின்றன. இதன் மூலமாக எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அந்த நபரை அடையாளம் காண்பது என்பதை எளிதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.