இந்தியாவில் வங்கிகள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அதன்படி தற்போது நான்கு வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டியை உயர்த்தியுள்ள நிலையில் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆக்சிஸ் வங்கி:

7 முதல் 10 வருடங்களில் முதிர்ச்சி அடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 8.05 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதனைப் போலவே பொது வாடிக்கையாளர்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.3 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பெடரல் வங்கி:

மூத்த குடிமக்கள் 13 மாத காலத்துடன் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் மீது 8.7 சதவீதம் வட்டி விகிதத்தை பெறலாம். சிறந்த வட்டி விகிதங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இரண்டு கோடிக்கும் குறைவாக முதலீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரா வங்கி:

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை நான்கு சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை மாற்றியுள்ளது. 15 லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 444 நாட்களுக்கு 5.35% முதல் 7.90 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Suryoday Small Finance Bank:

மூத்த குடிமக்களுக்கு ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட இரண்டு கோடிக்கும் குறைவான முதலீட்டு தொகைக்கு 4.50 சதவீதம் முதல் 9. 10 சதவீதம் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிகபட்ச வட்டி 9.10 சதவீதத்தை வழங்குவதாகவும் வங்கி அறிவித்துள்ளது.