இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் குரூப் அசிஸ்டன்ட் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்தது. இதில் ஆண்டு பிரிமியமாக 399 ரூபாய் செலுத்தி 10 லட்சம் ரூபாய் காப்பீடு பெறலாம். 18 முதல் 65 வயது உடையவர்கள் இதற்கு தகுதியானவர்கள். விபத்தில் மரணம் மற்றும் நிரந்தர ஊனம், உடல் உறுப்புகள் செயல் இழந்தால் பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

உள்நோயாளிகள் பிரிவில் விபத்து மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 60000 மற்றும் நெறி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றால் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இது குறித்த கூடுதல் விவரங்களை பெறுவதற்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது https://www.ippbonline.com/web/ippb/tagic-group-accident-insurance என்ற இணையதளத்தை அணுகலாம்.