சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர் சத்து குறைபாடு உள்ள பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் சளி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஜீரண மண்டல கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கூடுதல் விவரங்களை மக்கள் http://cdsco.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.