மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் திருப்பதி மலை பாதையில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலை பாதையில் பாஸ்டேக் வழங்கும் மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாஸ்டேக் முறையை அறிமுகம் செய்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பை மேம்படுத்தவும் கூட்ட நெரிசலை குறைக்கவும் வெளிப்படையான கட்டண வசூலை உறுதி செய்யவும் பாஸ்டேக்-ஐ கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.