உத்தரபிரதேசத்தில் திருமண மேடையிலேயே மணப்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண சடங்கான நிகழ்வின் போது, மணமகன் மணப்பெண்ணுக்கு மாலை சூட்டிக்கொண்டிருந்த தருணத்தில், ஒரு நபர் திடீரென மேடைக்கு வந்து மணப்பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மேலும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போவதற்குள், அந்த நபர் அந்த இடத்திலிருந்து தப்பியோடினார். இரத்த வெள்ளத்தில் சரிந்த மணப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது மணப்பெண்ணை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த ஒரு ” வெறிபிடித்த காதலன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“>

இதனால் தன்னிடம் பேச மறுத்ததாலும், வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாலும் ஆத்திரமடைந்த அந்த நபர், திருமண மேடையிலேயே இந்தப் பாதகத்தைச் செய்துள்ளான். காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.