சமீபகாலமாக இளைஞர்களிடையே சாலைகளில் சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. அவ்வாறு வளைந்து நெளிந்து பைக் ஓட்டும் சாகசத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞருக்கு நேர்ந்த கதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த அந்த இளைஞர், மற்ற வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் தன் பைக்கை வளைத்து ஓட்ட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் பயங்கரமாக வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

“>

இந்த விபத்தின் வீடியோ பார்ப்பவர்களை அதிரவைக்கும் வகையில் உள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் உயிர் தப்பினாரா என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை என்றாலும், சாலையில் இது போன்ற சாகசங்கள் செய்வது எவ்வளவு உயிருக்கு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களின் உயிருக்கும் தங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை என்பது சாகசம் செய்வதற்கான இடம் அல்ல, அது பாதுகாப்பாக பயணம் செய்வதற்கானது என்பதை இந்த வைரல் வீடியோ எச்சரிக்கையாக அமைந்துள்ளது.