உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமனார் ஒருவரே தனது மருமகளைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதே ஆன முஷ்கரா என்ற இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அறைக்குள் நுழைந்த அவரது மாமனார் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

தனது காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள மருமகளிடம் தவறான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முஷ்கரா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், மருமகளை வலுக்கட்டாயமாகப் பணிய வைக்க முயன்றுள்ளார்.

அதற்கு அந்தப் பெண் மசியாததால், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மாமனார் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் முஷ்கராவைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

இந்த ரத்தக் கறையோடு அந்த நபர் தப்பியோடிய நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அலறியுள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் முஷ்கராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த காமவெறி பிடித்த மாமனாரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.