மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையை கடக்க முயன்ற பெண் மீது பயங்கரமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சாலை விதிகளை மதிக்காமல் மிக அதிவேகமாக கார் ஓட்டப்பட்டதே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. காரின் வேகம் எவ்வளவு அதிகமாக இருந்தது என்றால், மோதிய வேகத்தில் அந்தப் பெண் தூக்கி வீசப்பட்ட காட்சி பார்ப்பவர்களை உரைய வைக்கிறது.

“>

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த நபரைக் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் நிலையில், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நகர்ப்புற சாலைகளில் வாகன ஓட்டிகள் பொறுப்பற்ற முறையில் அதிவேகமாகச் செல்வது தொடர்கதையாகி வருவதாகவும், இது போன்ற கவனக்குறைவான ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை பாதுகாப்பு விதிகளை மீறுவது ஒரு உயிரையே பறிக்கும் என்பதற்கு இந்த விபத்து மற்றொரு சாட்சியாக அமைந்துள்ளது.