சென்னையில் சமீபத்தில் 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிப்பதற்காக சென்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது நதியா என்ற 37 வயது தரகர் தான் இதனை நடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது திடுக்கிடும் தகவலாக நதியாவிற்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருப்பதாகவும் அவரின் மூலம் உடன்படிக்கும் அழகான ஏழ்மையான குடும்பத்து மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் புரோக்கர்களை வைத்து சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஒரு சிறுமிக்கு 25 முதல் 30000 ரூபாய் வரை விலை விலை பேசி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.