தமிழ்நாட்டிற்கு வருவான் தமிழ் மொழியின் பெருமையை பேசுவான், கர்நாடகாவிற்கு போவான் காவிரி பிரச்சனையை தூண்டுவான், ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று சொல்லுவான் – உலக மகா நடிகன் அவன் யார்? என்று ஹேமந்த் அண்ணாதுரை என்ற வழக்கறிஞர் போஸ்டர் அடித்து தெருமுழுக்க ஒட்டி உள்ளது பரபரப்பு கிளப்பி உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.