வேளாங்கண்ணியில் இருந்து வாராந்திர சிறப்பு முறையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது வேளாங்கண்ணியில் இருந்து இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி மே 25, 27, ஜூன் 1, 3, 8, 10, 15, 17 தேதிகளில் இரவு 7.10 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு எழும்பூருக்கு மறுநாள் காலை 3.20 மணிக்கு ரயில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.