தமிழகத்தில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் மாநில அரசின் தாயுமானவர் திட்டம் தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதரவற்றோர் தனித்து வசிக்கும் முதியோர் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.