தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 2740 ரூபாய், அக்டோபர் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 3,830 ரூபாய் மின்வாரியம் வசூலித்ததாக நுகர்வோர் மின்னட்டையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த செய்தி குறித்து மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மின் கட்டணம் எதுவும் தற்போது உயர்த்தப்படவில்லை.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 720 யூனிட் மின்சாரத்திற்கு 3 ஆயிரத்து 830 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்ட நுகர்வோர் ஆகஸ்ட் மாதத்தில் 1090 ரூபாய் வைப்புத் தொகை வைத்திருந்ததால் அந்த தொகையையும் அதன் வட்டியில் 4.68 ரூபாயும் கழிக்கப்பட்டு 2,740 ரூபாய் மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.