தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைத்துக் கொடுக்கும் பணியை பெண் தையலர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது. சோதனை அடிப்படையில் 100 பள்ளிகளுக்கான ஆர்டர் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் 37 லட்சம் மாணவர்களுக்கான 2 செட் சீருடைகளை தைத்துக் கொடுக்கும் பணி ஒப்படைக்கப்படும். பல ஆயிரம் கணக்கான பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.