பிரபல யூடியூபரும் பைக் ரேசருமான டிடிஎஃப்  வாசன் கடந்த வருடம் விபத்து ஒன்றில் சிக்கிய நிலையில் அவருடைய கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. இவரை அதிவேகமாக பைக் ஓட்டிய காரணத்திற்காக காவல்துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த விபத்துக்கு பிறகு அவருடைய லைசென்ஸ் 10 வருடங்களுக்கு தடை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து டிடிஎஃப் வாசன் சென்னையில் பைக் ரேஸ் செல்பவர்களுக்கு தேவையான உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையை திறந்தார். இவருடைய கடையின் பெயர் டிடிஎப் பிட் சாட். இந்த கடை சென்னையில் உள்ள அயப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் அம்பத்தூர் காவல்துறையினர் தற்போது டிடிஎப் வாசன் கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதாவது அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை விற்பனை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அதன் அடிப்படையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவருடைய கடைக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு ஆய்வு செய்ததோடு கடைக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களையும் அப்புறப்படுத்தினார்.