உத்தர் பிரதேஷ் மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் 16 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட வழக்கை, போலீஸார் வெறும் 8 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர். சிறுமி கடத்தப்பட்ட அன்று மதியம் 1 மணியளவில், அவர் வீட்டில் இல்லை என்று அவரது தம்பி வந்து கூறியுள்ளார். உடனடியாகத் தேடத் தொடங்கிய குடும்பத்தினருக்கு, இன்ஸ்டாகிராமில் ஒரு அதிர்ச்சியான மெசேஜ் வந்தது. அதில், சிறுமி நாற்காலியில் கட்டப்பட்ட நிலையில் மயக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம் அனுப்பப்பட்டு, ‘மறுநாள் உடல் ஆற்றில் கிடக்கும்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

​இந்த மிரட்டல் கிடைத்தவுடன் போலீஸார் மிக வேகமாகச் செயல்பட்டனர். அவர்கள் சிறுமியை ஒரு ஹோட்டலில் இருந்து பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தில் சஹில் மௌரியா உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சஹில், சிறுமிக்குப் பழக்கமானவர் என்று தெரியவந்துள்ளது. மிரட்டல் புகைப்படம் அனுப்பியதற்கான உண்மையான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் துரித நடவடிக்கைக்குச் சிறுமியின் குடும்பத்தினர் மனதார நன்றி தெரிவித்தனர்.