அரசியல்வாதி, பாடகர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் அமிதாபச்சன் தன்னுடைய குடும்பத்தோடு மும்பையில்  தங்கியிருக்கிறார். இவர் சினிமா பயணத்தில் 50 வருடங்களை முடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய குடும்பம் மிகப்பெரிய மற்றும் பிரபலமான குடும்பம். இவருடைய மனைவி ஜெயா பச்சன்  நடிகை மற்றும் எம்பி. அவருடைய மகள் ஸ்வேதாபச்சன் எழுத்தாளர்.

மகன் அபிஷேக் பச்சன் நடிகர் அவருடைய மனைவி ஐஸ்வர்யா ராய். இந்த நிலையில் பாலிவுட் வட்டாரமே மிகப்பெரிய பேசு பொருளாக பேசி வருவது அமிதாப்பச்சன்  அவருடைய மகளுக்கு பிரதிக்ஷா என்னும் பங்களாவை அவருடைய மகள் ஸ்வேதாவிற்குக்கு பரிசாக கொடுத்துள்ளார் . ஸ்வேதாவிற்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்த ஆடம்பர பங்களாவின் மதிப்பு கிட்டத்தட்ட அரை நூறு கோடி ரூபாய் விட அதிகம் என்று பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.