தமிழக மகளிருக்கான ரூ.1000 உதவிதொகை வழங்கும் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முன்னதாக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப பதிவு முகாமை தர்மபுரியில் ஜூலை 24 -ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு 3 நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், முதற்கட்டமாக 20,765 ரேஷன் கடைகளிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.