ரூ.5,600 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பாக “DMK Files-2” என்ற பெயரில் அண்ணாமலை பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதி, ETL நிறுவனம் ரூ.3000 கோடி, போக்குவரத்துதுறையில் ரூ.2,000 கோடி, மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி முறைகேடு செய்துள்ளதாகவும், அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட பெயரும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் அமைச்சர்களின் பட்டியலை ஆளுநரிடம் ரூ.5,600 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பாக “DMK Files-2” என்ற பெயரில் அண்ணாமலை இன்று ஒப்படைத்தார். இதுதொடர்பாக பேசிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை கொடுத்த ஆவணத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. மணிப்பூர் உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு கட்டாயம் பதில் அளிப்போம் எனத் தெரிவித்தார்