நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொமதேக வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கொமதேக வேட்பாளருக்கு ஆதரவாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்பொழுது நாமக்கல் நகரப் பகுதியில் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் பேசிக்கொண்டு இருந்த போது, திடீரென்று அங்கிருந்து ஒரு பெண்மணி எனக்கு மகளிர் உதவித்தொகை ரூ.1,000 வழங்கவில்லை எனக் கூறி அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.